மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு நடிகருமான மறைந்த என்டிஆர் வாழ்க்கை வரலாற்றை அவருடைய மகன் பாலகிருஷ்ணா 'என்டிஆர்' என்ற பெயரில் படமாக எடுத்து வருகிறார். பரபரப்பாக உருவாகி வரும் இந்தப் படத்தை அடுத்த வருடப் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இந்தப் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள், நிஜ கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் அளவிற்கு தேர்வு செய்யப்பட்டு நடித்து வருகிறார்கள். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்று, என்டிஆரின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரத்தில் தெலுங்கில் ஆமனி என அழைக்கப்படும் மீனாட்சி நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 'என்டிஆர்' படத்தில் லட்சுமி பார்வதி சம்பந்தப்பட்ட காட்சிகள் கொஞ்சம்தான் இடம் பெறும் எனத் தெரிகிறது.
ராம்கோபால் வர்மா இயக்க உள்ள 'லட்சுமியின் என்டிஆர்' படம்தான் லட்சுமி பார்வதியின் முழு கதையையும் உள்ளடக்கி இருக்குமாம். இந்தப் படத்தில் லட்சுமி பார்வதியாக நடிக்க ரோஜாவிடம் கேட்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.