இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற படம் தில்லுக்கு துட்டு. ஹாரர் காமெடி வகையைச் சேர்ந்த இந்தப் படத்தில் சந்தானம், ஆஞ்சல் சிங், கருணாஸ், ஆனந்த்ராஜ், நான் கடவுள் ராஜேந்திரன் நடித்திருந்தனர். ராம்பாலா இயக்கி இருந்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராமசாமி தயாரித்திருந்தார்.
இதே டீம் மீண்டும் இணைந்து தில்லுக்கு துட்டு இரண்டாம் பாகத்தை உருவாக்கி வந்தது. ஹீரோயின் மட்டும் மாற்றம். இதில் ஸ்ரத்தா சிவதாஸ் நடிக்கிறார். கூடுதலாக கலக்கப் போவது யாரு டீமைச் சேர்ந்த ராமர் மற்றும் தனசேகர் நடிக்கிறார்கள். ஹாண்டட் பிலிம்ஸ் சார்பில் என்.சந்தானம் தயாரிக்கிறார். ஷபீர் இசை அமைக்கிறார், தீபக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. வருகிற 29ம் தேதி படத்தின் டீஸரை வெளியிடுகிறார்கள். தீபாவளிக்கு பிறகு படத்தை வெளியிடுகிறார்கள். சந்தானம் நடித்த கடைசி வெற்றிப் படம் தில்லுக்கு துட்டு, அதன் பிறகு நடித்த படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. தில்லுக்கு துட்டு 2ம் பாகம், விட்ட இடத்தை பிடித்து தரும், என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சந்தானம்.