நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பல விளம்பர படங்களை இயக்கியுள்ள ஸ்டார் குஞ்சுமோன் இயக்கியுள்ள படம் அவதார வேட்டை, அவரே தயாரித்தும் உள்ளார். இதில் வி.ஆர்.விநாயக் என்ற புதுமுகம் ஹீரோவாகவும், மீரா நாயர் என்ற புதுமுகம் ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் ராதாரவி, ரியாஸ்கான், சோனா உள்பட பலர் நடிக்கிறார்கள். காசி விஷ்வா ஒளிப்பதிவு செய்கிறார், மைக்கேல் இசை அமைக்கிறார். இது ஒரு குழந்தை கடத்தல் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு தயாராகி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் ஸ்டார் குஞ்சுமோன் கூறியதாவது:
சமூகத்தில் நடந்த, நடந்து கொண்டிருக்கிற தடுக்க முடியாத குற்றங்களில் ஒன்றான குழந்தை கடத்தலை கருவாக கொண்டு விறுவிறுப்பான திரைக்கதை மூலம் உருவாகி இருக்கும் படம். சமீபத்தில் நடந்த ஒரு குழந்தை கடத்தலை மையமாக கொண்டு உருவாகி உள்ளது.
திட்டம் போட்டு குழந்தைகளை திருடும் திருடர்களை ஹீரோ எப்படி கண்டுப்பிடிக்கிறார் என்பது தான் கதை. படப்பிடிப்பு உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஊட்டி மற்றும் மதுரையில் நடைபெற்றது. என்கிறார்.