இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தனுஷின் ஆடுகளம் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை டாப்சி. தமிழில் சில படங்களில் நடித்தவர், பிறகு தெலுங்கு, ஹிந்தி என பிஸியானார். சமீபகாலமாக ஹிந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார் டாப்சி. 'மாயா', இறவாக்காலம் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் இப்படத்திற்கு, கேம் ஓவர் என பெயரிடப்பட்டுள்ளது. இதுவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாகத் தான் உருவாகிறது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. அக்., 11(நாளை) முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.