ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நயன்தாரா நடிப்பில் வெளியான 'மாயா' மற்றும் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கெசண்ட்ரா நடித்த 'மாநகரம்' ஆகிய படங்களைத் தயாரித்த 'பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்' நிறுவனம் 'ஒரு நாள் கூத்து' பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் மான்ஸ்டர் படத்தை தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் எஸ்.ஜே,சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சத்தமில்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு, தற்போது முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.
படவேலைகள் முடிவடைந்ததும் இப்படத்தின் டைட்டிலை அக்டோபர் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்கு படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீஸர், டிரைலர் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
இப்படத்துக்கு டப்பிங் பேசியபோது இந்தப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என படத்தின் மீது எஸ்.ஜே.சூர்யாவுக்கு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.