நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடிக்கும் 'ஆண்தேவதை' அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகிறது. 'அர்ஜுன் ரெட்டி' தெலுங்கு படத்தில் நடித்து புகழ் பெற்ற தெலுங்ஙகு ஹீரோ விஜய் தேவரகொண்டாவை வைத்து, ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள நோட்டா('NOTA'), விவேக் நடித்துள்ள 'எழுமின்' ஆகிய படங்களும் இதே தேதியில் வெளியாக இருக்கிறது.
விஜய் சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்துள்ள '96' ஒருநாள் முன்னதாக அக்டோபர் 4-ஆம் தேதி வெளியாகிறது. நான்கு படங்கள் ஒரே வாரத்தில் வெளியாவதால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆண் தேவதை, எழுமின், 96 ஆகிய 3 படங்களும் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏற்கனவே ஒப்பதல் பெற்ற நிலையில் கடைசி நேரத்தில் நோட்டா உள்ளே நுழைய, ஆண் தேவதை, எழுமின், 96 படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.
நோட்டா படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும்படி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறையிட்டுள்ளனர்.