பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை ஆண்ட்ரியா, பன்முக தன்மை கொண்ட ஒரு நடிகை. தரமணியில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அவர் ஒரு பாடகி, ஏராளமான வெற்றிப் பாடல்களை பாடியுள்ளார். ஆங்கிலத்தில் கவிதை எழுதுகிறவர். ஏராளமான வீடியோ பாடல்களை எழுதி, பாடி வெளியிட்டுள்ளார்.
தற்போது முதன் முறையாக ஒரு ஆல்பத்தை தானே இயக்கி வெளியிட்டுள்ளார். ஹானஸ்ட்லி என்ற டைட்டில் கொண்ட இந்த வீடியோ ஆல்பம், காதலுடன் பிரேக்அப் ஆன ஒரு பெண் ஏக்கமும், சுதந்திர உணர்வும் கொண்டு பாடுவதாக அமைந்த பாடல். இந்த பாடலை ஆண்ட்ரியா எழுதி, பாடி நடித்திருக்கிறார். இதற்கு லியான் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். கெபா ஜெரிமியா என்ற இளைஞர் ஆண்ட்ரியாவுடன் ஆல்பத்தில் நடித்துள்ளார். யு டியூப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.