ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
8 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, நவரச திலகம், ஜித்தன் 2, தர்மதுரை, அச்சமின்றி, முப்பரிமாணம், காலகூத்து உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் அவரை முன்னணி ஹீரோயின் அந்தஸ்துக்கு உயர்த்தவில்லை.
இந்த நிலையில் தற்போது அர்ஜுனா என்ற படத்தில், புதுமுகம் விஜய் சந்தோஷ் ஜோடியாக நடிக்கிறார். ஸ்பைசி க்ளவுட் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கே.லோகநாதன் தயாரிக்கிறார், ஸ்ரீமணி இயக்குகிறார்.
நாசர், பால சரவணன், சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்கிறர்கள். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்ய, நிர்மல் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு துவக்க விழா நேற்று பிரசாத் லேப்பில் நடந்தது. இயக்குனர் கே.பாக்யராஜ் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். சிருஷ்டி டாங்கேவை அர்ஜுனா கைதூக்கி விடுவாரா என்பது படம் வெளிவந்ததும் தெரியும்.