சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கதில் உருவாகி உள்ள படம் செக்கச் சிவந்த வானம். அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்திருக்கிறார்கள்.
அதிரடி ஆக்சன் நிறைந்த தாதாயிசம் நிறைந்த கதையில் உருவாகி உள்ள இப்படத்தின் இசையும், டிரைலரும் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளன. ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். மணிரத்னமும், லைகாவும் இணைந்து தயாரித்துள்ளது.
செப்., 28-ம் தேதி, செக்கச் சிவந்த வானம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு ஒருநாள் முன்னதாக செப்., 27-ல் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.