பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து ராஜு முருகன் இயக்கிவரும் படம் 'ஜிப்ஸி. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இமாச்சல பிரதேச அழகி நடாசா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது இந்தப்படத்தில் மலையாள நடிகர் சன்னி வெய்ன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
துல்கர் சல்மான் மலையாளத்தில் அறிமுகமான செகண்ட் ஷோ படத்தில் தான் சன்னி வெய்னும் அறிமுகமானார். அதன்பிறகு துல்கரின் நண்பராக மாறிய சன்னி வெய்ன், அவருடனேயே இணைந்து சுமார் நான்கு படங்களில் நடித்துவிட்டார். மலையாளத்தில் முக்கியமான கேரக்டர்களிலும், கதையின் நாயகனாகவும் மாறி மாறி நடித்து வரும் சன்னி வெய்ன், ஜிப்ஸி மூலம் தமிழில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.