'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் இளைய மகன் ஜீவா நடிகராகி தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறார். மூத்த மகன் ரமேஷ், ஜித்தன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ஜெர்ரி, நீ வேணுண்டா செல்லம், மதுரை வீரன், பிள்ளையார் தெரு கடைசி வீடு, ஜித்தன் 2ம் பாகம் படங்களில் நடித்தார். ஆனால், அவருக்கு சரியான இடம் கிடைக்கவில்லை. இதனால் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டார். இந்த நிலையில் வில்லனாக நடிக்கிறார் ஜித்தன்.
யஷ்வந்த் கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ரவி சவுத்ரி நாகார்ஜுனா தயாரிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. கதாநாயகனாக சாய் நடிக்கிறார். கதாநாயகியாக வங்காளத்தை சேர்ந்த ஈனா என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. ரவி ஒளிப்பதிவு செய்கிறார். ஆனந்த் இசை மைக்கிறார், வம்சி கிருஷ்ண மல்லா இயக்குகிறார்.
"வில்லனாக நடிப்பது ஏன் என்று சிலர் கேட்கிறார்கள். படம் திரைக்கு வந்தவுடன் இந்த கேள்வி வராது. சில மாதங்கள் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன் இயக்குனர், கேரக்டரை சொன்னவுடன் இந்த கேரக்டரை விடக் கூடாது என்று முடிவெடுத்து ஓகே சொன்னேன். சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல் ஹீரோவா, வில்லனா? அது மாதிரி தான் என் கேரக்டரும். "ஹை வோல்டேஜ் வில்லன்" என்று சொல்லலாம்" என்றார் ஜித்தன் ரமேஷ்.