இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
அப்பா தியாகராஜன் தயாரிப்பில் மகன் பிரசாந்த் நடிக்கும் படம் ஜானி. இதில் சஞ்சிதா ஷெட்டி, ஆனந்த்ராஜ், பிரபு, சாயாஜி ஷிண்டே, அஷ்தோஷ் ராணா, உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜீவா சங்கரின் உதவியாளர் வெற்றி செல்வன் இயக்குகிறார். இந்தப் படத்தில் கிராபிக் டிசைனராக பணியாற்றி உள்ளார் பிரஷாந்த். இதுகுறித்து அவர் கூறியதாவது:
கிராபிக் டிசைனிங்கை நான் விரும்பி, ஆர்வத்துடன் கற்றுக் கொண்டேன். அதனால் எனது படத்திற்கு நானே கிராபிக் டிசைனராக பணியாற்றி இருக்கிறேன். இந்தப் படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறது. அதனை நானே உருவாக்கி இருக்கிறேன். அது கிராபிக்ஸ் என்று கண்டுபிடிக்க முடியாது. அதுதான் அதில் உள்ள சிறப்பு. இன்னும் இந்த துறையில் வந்து கொண்டிருக்கும் புதிய புதிய விஷயங்களை கற்று வருகிறேன்.
பணத்துக்கு பின்னால் ஓடும் ஒரு கூட்டத்தை பற்றிய கதைதான் ஜானி. சஸ்பென்ஸ் திரில்லர் வகை படம் என்பதால் இதற்குமேல் படம் பற்றி சொல்ல முடியாது. அப்பா இயக்கிய ஷாக் படத்திற்கு பிறகுதான் தமிழ் சினிமாவில் பேய் படங்கள் வர ஆரம்பித்தது. அதுபோல ஜானி படம் வெளிவந்ததும் புதிய டிரண்ட் செட்டிங் உருவாகி இதுபோன்ற படங்கள் வரும். என்கிறார் பிரசாந்த்.