ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
1979ம் ஆண்டு வெளிவந்த படம் நீயா. இதில் கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா, லதா உள்பட பலர் நடித்திருந்தார்கள். காட்டுக்குள் தன் காதலியோடு இன்பமான வாழ்க்கை வாழும் இச்சாதாரி பாம்பை அங்கு சுற்றுலா சென்ற நண்பர்கள் கொன்று விட அந்த பாம்பின் காதலி அழகான பெண் உருவமெடுத்து பழிவாங்குகிற கதை. அந்த பாம்பாக ஸ்ரீப்ரியா நடித்திருந்ததோடு படத்தை தயாரித்தும் இருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகிறது.
பழிவாங்கும் பாம்பு என்பதுதான் முதல் பாகத்தின் தொடர்ச்சி மற்றபடி கதை, களம் அனைத்தும் வேறு. இதில் பழிவாங்கும் பாம்பு கேரக்டரில் வரலட்சுமி நடிக்கிறார். முறைப்படி அவர் நடனம் கற்றிருப்பதால் இந்த கேரக்டருக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருடன் ராய் லட்சுமி, கேத்ரின் தெரசா நடிக்கிறார்கள் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார்.
ஜம்போ சினிமா சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரிக்கிறார். எல்.சுரேஷ் இயக்குகிறார். ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். ஷபிர் இசை அமைக்கிறார். தற்போது படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வரலட்சுமி சரத்குமார் முன்பு நீயா படத்தில் ஸ்ரீப்ரியா இருந்த அதே போசில் வரட்சுமியின் படம் இடம் பெற்றுள்ளது. தலைப்பிலும் பாம்பு இடம் பெற்றுள்ளது.