பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
சாமி இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடித்துள்ள பாபி சிம்ஹா, தற்போது வல்லவனுக்கு வல்லவன் படத்திலும், இதைத்தொடர்ந்து அக்னிதேவ் என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இதில் பாபிசிம்ஹாவுடன் மதுபாலா, சதீஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். சென்னையில் ஒரு நாள் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிய ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து இயக்குகிறார்கள். தற்போது இதன் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.
இப்போது இந்த படத்தில் பாபி சிம்ஹா ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இருவரும் பீட்சா படத்தில் இணைந்து நடித்திருந்தாலும் பாபி சிம்ஹாவுக்கு அவர் ஜோடியாக நடிக்கவில்லை. இந்தப் படத்தை சியாண்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.