'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடித்துள்ள 'சீமராஜா' படம் வரும் விநாயக சதுர்த்தியன்று வெளியாகிறது. கன்னட இயக்குநர் பவன்குமார் இயக்கத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ள 'யு-டர்ன்' படமும் அதேநாளில் வெளியாகிறது.
சமந்தா நடித்த 'இரும்புத்திரை', 'நடிகையர் திலகம்' ஆகிய இரண்டு படங்களும் கடந்த மே மாதம் 11-ஆம் தேதி வெளியாகின. தான் நடித்த இரண்டு படங்கள் மீண்டும் ஒரேநாளில் வெளியாவதை எண்ணி உற்சாகத்தில் இருக்கிறார் சமந்தா.
இது ஒரு பக்கம் இருக்க, சீமராஜா வெளியாகும் அதேநாளில் சாமி ஸ்கொயர் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். சாமி ஸ்கொயர் தயாரிப்பாளரின் இந்த முடிவு சீமராஜா படத்தின் தயாரிப்பாளரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தனியாக வந்து வசூலைக் குவிப்பது தான் சிவகார்த்திகேயன் பார்முலா. சீமராஜா ரிலீஸ் தேதியில் சாமி ஸ்கொயர் படத்தை ரிலீஸ் செய்ய வைத்து சிக்கலை ஏற்படுத்திவிட்டனர்.