ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
வசந்தபாலன் இயக்கிய படங்கள் கமர்ஷியலாக வெற்றியடைகிறதோ இல்லையோ... ஆனால் தரமான படமாக இருக்கும். அந்தவரிசையில் ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக நடிக்க வைத்து ஜெயில் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
'வெயில்' படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியதே இவர் தான். இப்போது தன்னுடைய இயக்கத்தில் அவரை நடிகராக வைத்து இயக்குகிறார் வசந்த பாலன்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பழைய மகாபலிபுரம் சாலையில் சமீபத்தில் துவங்கியது. பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட இந்த படத்திற்கு 'ஜெயில்' என்று வித்தியாசமாக இப்போது பெயர் சூட்டப்படடுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வரும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன், அர்த்தனா பினு கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ஜி.வி.பிரகாஷுடன் 'செம' படத்தில் இணைந்து நடித்தவர்.
'ஜெயில்' படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசை அமைக்க, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தொகுப்பை 'அருவி' படப் புகழ் ரேமண்ட் கவனிக்கிறார்.
'ஜெயில்' படத்தின் கதை என்ன தெரியுமா? பழைய மகாபலிபுரம் சாலையை ஒட்டியுள்ள கண்ணகி நகர் மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் படமாம் இது. இப்படத்தின் கதை மூன்று காலக்கட்டங்களைக் கொண்டது.