திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் அண்ணனுக்கு ஜே. இப்படத்தை அறிமுக இயக்குநரான ராஜ்குமார் இயக்கியுள்ளார். இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.
கதாநாயகனாக தினேஷ் நடித்துள்ள இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அண்ணனுக்கு ஜே படத்தின் பாடல் காட்சிகளும் டிரைலரும் திரையிடப்பட்டன.
தினேஷ் - மஹிமா நம்பியார் காதல்காட்சியில், தனக்கு முத்தம் கொடுக்க தயங்கும் தினேஷைப் பார்த்து, போ.. போய் கமல் நடிச்ச படத்தைப் பார்த்துட்டு வந்து முத்தம் கொடு என்கிற ரீதியில் ஒரு வசனம் இடம் பெற்றுள்ளது.
வெற்றிமாறனின் தயாரிப்பில் வரும் படத்தில் இப்படியொரு வசனமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.