'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இளம் ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என தமிழ் சினிமாவில் அடிக்கடி ஆபாசப் படங்கள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஜி.வி.பிரகாஷ் நடித்த 'த்ரிஷா இல்லனா நயன்தாரா', கௌதம் கார்த்திக் நடித்த ''ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து' படங்களின் வரிசையில் 'பியார் பிரேமா காதல்' படமும் இருக்குமோ என்ற சந்தேகத்தை அப்படத்தின் டிரைலர் எழுப்பியுள்ளது.
யுவன்ஷங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் இளன் இயக்குகிறார். பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் கெட்ட வார்த்தைகள், இரட்டை அர்த்த வசனங்கள், குறிப்பிடாமல் விடப்பட்ட வார்த்தைகள் என தரமற்று உள்ளது.
இப்படி ஒரு படத்தை யுவன்ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு படத்தின் டிரைலர் தான் அந்தப் படம் எப்படியிருக்கப் போகிறது என்பதை முன்னோட்டமாகக் காட்டுகிறது. யுவனின் அப்பா இளையராஜா கூட படங்களைத் தயாரித்திருக்கிறார். ஆனால், அவர் குடும்பப் பாங்கான படங்களைத்தான் தயாரித்துள்ளார்.
'பியார் பிரேமா காதல்' டிரைலருக்கு அதிகமான பார்வைகளும், கமெண்ட்டுகளும் கிடைத்து வருவதை வைத்தே இந்தப் படம் யாருக்கான படம் என்பது புரிந்திருக்கும்.