பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. 2018ம் ஆண்டில் சமந்தா நடித்து தெலுங்கில் வெளிவந்த 'ரங்கஸ்தலம், மகாநடி', தமிழில் வெளிவந்த 'இரும்புத்திரை' ஆகிய படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. இதில் 'மகாநடி' தமிழில் 'நடிகையர் திலகம்' ஆகவும், 'இரும்புத்திரை' தெலுங்கில் 'அபிமன்யுடு' ஆக டப்பிங் ஆகியும் நல்ல வசூலைப் பெற்றன.
சமந்தா நடித்து அடுத்ததாக தமிழில் 'சீமராஜா' படம் வெளிவர உள்ளது. இந்தப் படத்தை செப்டம்பர் 13ம் தேதி வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டனர். இந்த நிலையில் சமந்தா நடித்துள்ள மற்றொரு படமான 'யு டர்ன்' படத்தையும் செப்டம்பர் 13ம் தேதியே வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். கன்னடத்தில் வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்ற 'யு டர்ன்' படம் அதே பெயரில் தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ளது. படத்தில் சமந்தாதான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஒரே சமயத்தில் சமந்தா நடிக்கும் இரண்டு படங்கள் செப்டம்பர் 13ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படங்களுக்குப் பிறகு சமந்தா, விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள 'சூப்பர் டீலக்ஸ்' படம் வெளிவரும்.
சமந்தா அவருடைய கணவர் நாகசைதன்யா உடன் நடிக்கும் நான்காவது படத்தை இன்று ஐதராபாத்தில் நாகார்ஜுனா ஆரம்பித்து வைத்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு சமந்தா, நாகசைதன்யா இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.