ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த வருடம் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் தி கிரேட் பாதர். ஹனீப் அதேனி என்கிற அறிமுக இயக்குனர் இந்த படத்தை இயக்கிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்த வருடமும் மம்முட்டி நடிப்பில் வெளியான ஆப்ரஹாமின்டே சந்ததிகள் படத்திற்கு கதை எழுதும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது. அதிலும் தன் திறமையை நிரூபித்து வெற்றிப்படம் ஆக்கியிருக்கிறார் ஹனீப் அதேனி.
இதனைத்தொடர்ந்து தற்போது நிவின்பாலி நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் ஹனீப் அதேனி. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. படத்திற்கு மைக்கேல் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு காவல் தேவதை என டேக் லைன் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடைபெற உள்ளது. குறிப்பாக ஆப்ரிக்காவில் நிறைய காட்சிகளை படமாக்க இருக்கிறார்களாம். அதுமட்டுமல்ல இந்தியாவில் உள்ள இன்னும் சில முக்கியமான இடங்களிலும் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. க்ரைம் த்ரில்லராக உருவாக உள்ள இந்த படத்தை மம்முட்டியின் ஆஸ்தான தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆண்டோ ஜோசப் தயாரிக்கிறார்.