Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கஜினிகாந்த்', ஒரு வருடம் கழித்து ஆர்யா படம்

05 ஜூலை, 2018 - 13:11 IST
எழுத்தின் அளவு:
Ghajinikanth-releasing-on-July-27

தமிழ்த் திரையுலகில் பாலா இயக்கிய 'நான் கடவுள்' படத்தில் நடித்ததற்குப் பிறகு ஆர்யாவுக்கும் நடிக்க வரும் என மற்ற இயக்குனர்களும் நம்பினார்கள். அடுத்து ராஜேஷ் இயக்கிய 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படம் ஆர்யாவை வசூல் ரீதியான நடிகராகவும் உயர்த்தியது. அதன்பிறகு வெளிவந்த படங்களில் 'ராஜா ராணி' படம் மட்டுமே அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது.

கடந்த 5 வருடங்களாக ஆர்யா நடித்து வெளிவந்த “மீகாமன், புறம்போக்கு என்கிற பொதுவுடமை, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, யட்சன், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், கடம்பன்” என வெளிவந்த அனைத்து படங்களுமே தோல்வியைத் தழுவியவை.

'கடம்பன்' படம் வெளிவந்து ஒரு வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆர்யா நடித்து முடித்துள்ள ஒரே படமான 'கஜினிகாந்த்' படம் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி இருக்க வேண்டிய படம். ஆனால், திரையுலக ஸ்டிரைக் காரணமாக தள்ளிப் போனது. இப்போது படம் ஜுலை 27ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை 'ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்த' ஆகிய ஆபாசப் படங்களின் இயக்குனரான சந்தோஷ் ஜெயகுமார் இயக்கியுள்ளார். இருப்பினும் இந்த 'கஜினிகாந்த்' படத்தை ஆபாசப் படமாக இல்லாமல் 'யு' படமாகத்தான் இயக்கியிருக்கிறார்.

ஆர்யா ஜோடியாக சாயிஷா சைகல் நடித்துள்ள இந்தப் படத்தில் கருணாகரன், சதீஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளார்கள். காதல் காமெடி படமாக உருவாகியுள்ள இந்தப் படம் தனக்கு 5 வருட வெற்றி இடைவெளியை நிரப்பும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஆர்யா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in