ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கிட்டத்தட்ட 33 வருடங்களாக மலையாள திரையுலகில் மாஸ் குறையாத இயக்குனராக வலம் வருபவர் சத்யன் அந்திக்காடு. இளம் நடிகர்கள் கூட, சீனியர் இயக்குனரான சத்யன் அந்திக்காடு டைரக்சனில் விரும்பி நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஏற்கனவே இவரது இயக்கத்தில் துல்கர் சல்மான், நிவின்பாலி, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் பஹத் பாசில் - சத்யன் அந்திக்காடு கூட்டணி 'ஒரு இந்தியன் பிரணயகதா' படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளது.
பொதுவாக சத்யன் படங்களில் கதாநாயகிகளுக்கு சம முக்கியத்துவம் கொடுப்பார். அந்தவகையில், இந்த புதிய படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நிகிலா விமல் ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் வெளியான அரவிந்தண்டே அதிதிகளை படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பார்த்துதான் இந்த பட வாய்ப்பு தேடி வந்ததாம். இந்தப்படத்திற்கு பிரபல நடிகரும் கதாசிரியருமான சீனிவாசன் கதை எழுதியுள்ளாராம்.