விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
ஜெய் - அஞ்சலி இருவரும் எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்தனர். அதிலிருந்து அவர்களுக்கிடையே காதல் மலர்ந்ததாகவும், இருவரும் ஒரே வீட்டில் வசித்ததாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.
திடுதிப்பென்று ஜெய்க்கும், எனக்குமிடையே எதுவும் இல்லை என்று சொல்லிக்கொண்டு புதிய படங்களில் கமிட்டாகி நடிக்கத் தொடங்கினார் அஞ்சலி. அதையடுத்து அவர்களது காதல் முறிந்து விட்டதாக கூறப்பட்டது.
இந்தநிலையில், கடந்த ஜூன் 16-ந் தேதி அஞ்சலியின் பிறந்தநாள். கடந்த ஆண்டு இதே நாளில் அஞ்சலிக்கு தனது இணைய பக்கத்தில் வாழ்த்து கவிதை வெளியிட்டிருந்த ஜெய், இந்த ஆண்டு அவருக்கு வாழ்த்து சொல்லவில்லை.
ஆக, ஜெய் - அஞ்சலி காதல் நிஜமாலுமே முறிந்து விட்டதை இது வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது.