'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல நடிகை சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகர். தில்லுமுல்லு படத்தில் ரஜினியின் தங்கையாக அறிமுகமாகி ஏகப்பட்ட படங்களில் நடித்தார். தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் விஜி, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். சினிமா, சின்னத்திரை இரண்டிலும் தற்போது நடித்து வருகிறார்.
விஜியின் மகள் லவ்லின், தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். விஜியின் தோழி, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் அடுத்த படத்தில் அவர் நடிக்கிறார். ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்து இயக்கும் படம் விரையில் தொடங்குகிறது. இதுபற்றிய முறையான அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.