ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
கடந்தாண்டு தமிழகத்தில் பிரபலமான ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கியது கூடுதல் சிறப்பு. முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வின்னர் பட்டம் வென்றார். இதன் இரண்டாவது சீசன் வருகிற 17-ம் தேதி முதல் ஆரம்பமாகிறது. கமலே இந்தமுறையும் தொகுத்து வழங்க உள்ளார்.
பிக்பாஸ் சீசன் 2விற்கான வீடு சென்னை இவிபி., சிட்டியில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. முதல்பாகத்தில் இருந்த அதே வீடு தான், ஆனால் உள்ளே ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்த சீசன் 2வில் புதிதாக ஜெயில் போன்ற ஒரு செட்டை உருவாக்கி வைத்துள்ளனர். முதல் சீசனில் தோற்றவர்கள் விதிகளை மீறியவர்களுக்கு சில தண்டனைகள் வழங்கப்படும். இந்த முறை தண்டனை சற்று வித்தியாசமாக ஜெயலில் அனுபவிப்பது போன்று இருக்கும் என தோன்றுகிறது.
இந்த ஜெயலில் ஆடம்பரமான எந்த விஷயமும் இருக்காது. சாதாரண கட்டில், மேஜை மட்டுமே உள்ளது. உறங்குவதற்கு மெத்தை, தலையணை கூட கிடையாது.
கடந்த சீசனை விட இந்த சீசன் இன்னும் களைகட்டும் என தெரிகிறது.