தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு நடிகர் என்றால் அவர் அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். ஏ சென்டர்களிலும் அவர் படங்கள் ஓட வேண்டும், பி சென்டர்களிலும் அவர் படங்கள் ஓட வேண்டும். மாஸ் ஆன படங்களையும் கொடுக்க வேண்டும், கிளாஸ் ஆன படங்களையும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் ரசிகர்களைக் கவர முடியும். அனைத்து ரசிகர்களையும் கவரும் நடிகர்களே வியாபார ரீதியிலும் முன்னணி இடத்தைப் பிடிக்கிறார்கள்.
விக்ரம் நடித்து ஒரு வாரத்திற்குள் அடுத்தடுத்து இரண்டு விதமான படங்களின் டிரைலர், டீசர் வந்து அவருடைய ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது.
ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்துள்ள 'சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. மிகவும் மாஸ் ஆன அதிரடி டிரைலராக அமைந்து சில சலசலப்பையும் அந்த டிரைலர் ஏற்படுத்தியது. இருப்பினும் ஒரு வாரத்திற்குள் யு டியூபில் 80 லட்சம் பார்வைகளை அந்த டிரைலர் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, சிம்ரன் மற்றும் பலர் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் 3வது டீசர் நேற்று வெளியானது. ஒரு ஆங்கிலப் படம் போல 'ஸ்பை த்ரில்லர்' ஆக இந்தப் படம் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் 3வது டீசர், 'சாமி ஸ்கொயர்' படத்திற்கு முற்றிலும் மாற்றாக அமைந்துள்ளது. ஒரே நாளில் இந்த டீசர் 30 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
'சாமி ஸ்கொயர், துருவ நட்சத்திரம்' இரண்டு படங்களும் இந்த ஆண்டில் வெளிவர உள்ளது. இரண்டுமே வெற்றி பெறும் என விக்ரம் ரசிகர்களுக்கு அதிக நம்பிக்கை வந்துவிட்டது.