துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
இசையமைப்பாளராக இருந்து நாயகனாக மாறியவர் ஜி.வி.பிரகாஷ். அவருடைய அறிமுகப் படமான 'டார்லிங்' படம் ஒரு ரீமேக் படம் என்பதால் வெற்றி பெற்றது. இரண்டாவது படமான 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் ஒரு ஆபாசம் படம் என்பதால் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதன் பிறகு ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளிவந்த 5 படங்களும் தோல்வியடைந்தது. அந்த வரிசையில் கடந்த வாரம் வெளிவந்த 'செம' படமும் சேர்ந்து அவரின் தோல்வியை 'செம'யாக தொடர வைத்திருக்கிறது.
தனக்குப் பொருத்தமான கதைகளையோ, நன்றாக ஓடக் கூடிய கதைகளையோ தேர்வு செய்யும் திறமை அவருக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது. தொடர்ந்து தோல்விகளைக் கொடுத்து வந்தாலும் ஜி.வி.பிரகாஷ் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன.
விரைவில் அவர் நாயகனாக நடித்துள்ள 'குப்பத்து ராஜா' படம் வெளிவர உள்ளது. அடுத்து, “4 ஜி, ஐங்கரன், அடங்காதே, 100% காதல், சர்வம் தாள மயம்” ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. அதோடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்திலும், வசந்த பாலன் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.
தன்னைத் தேடி வரும் பல வாய்ப்புகளை சரியாகத் தேர்வு செய்தால் மட்டுமே வெற்றிகளையும் கொடுக்க முடியும், தயாரிப்பாளர்களையும் காப்பாற்ற முடியும். அதை இனியாவது ஜி.வி.பிரகாஷ் சரியாகச் செய்வார் என எதிர்பார்ப்போம்.