பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ள 'இரும்புத்திரை' படம் தெலுங்கில் 'அபிமன்யுடு' என்ற பெயரில் டப்பிங் ஆகி ஜுன் 1ம் தேதி வெளியாக உள்ளது. தமிழில் மே 11ம் தேதியன்று வெளியான இந்தப் படம் விஷால் நடித்து இதுவரை வெளிவந்த படங்களிலேயே அதிக வசூலைப் பெற்றுள்ள படம் எனச் சொல்கிறார்கள்.
இந்தப் படம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த அளவிற்கு தெலுங்கு ரசிகர்களையும் கவரும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டெக்னாலஜி பற்றிய படம் என்பதால் இது அனைத்து மொழிகளுக்கும் பொதுவான கதையம்சம் கொண்ட படம் என்பதும் ஒரு காரணம். மேலும், விஷால் நடித்துள்ள பல படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாகியுள்ளன. சமந்தா தெலுங்கில் முன்னணி நாயகியாக இருக்கிறார். அர்ஜுன் தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இதனால், 'இரும்புத்திரை' படம் எளிதில் தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள்.