நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
சிந்துசமவெளி, பொறியாளன் போன்ற படங்களில் நடித்தும் ஹரீஷ் கல்யாண் க்ளிக் ஆகாத ஹீரோவாகவே இருந்தார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் அவருக்கு பப்ளிசிட்டி கிடைத்தது. அதை வைத்து ஹரிஷ் கல்யாணுக்கு ஓரளவு படவாய்ப்புகள் தேடி வந்தன.
இவர் இப்போது இளன் இயக்கத்தில் 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். யுவன் சங்கர்ராஜா தயாரிக்கும் இந்த படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி படு தோல்வியடைந்த 'புரியாத புதிர்' படத்தை இயக்கியவர் இவர்.
தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்துள்ளது. மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சினிமா ஸ்டிரைக் முடிவடைந்ததும் வெளியாகிறது.