'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலா இயக்கத்தில் ஜோதிகா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்த 'நாச்சியார்' படம் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியானது. ஜோதிகாவுடன் ஜி,வி.பிரகாஷ், இவானா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். 'நாச்சியார்' படம் வெளியானது போது ஊடங்களில் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வரவில்லை.
சுமார் என்றும், பரவாயில்லை என்கிற ரீதியிலேயே நாச்சியார் படத்துக்கு விமர்சனம் கிடைத்தது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக புதிய படங்கள் வெளியாகாத இப்போதைய சூழ்நிலையில் 'நாச்சியார்' படம் 50-வது நாளை எட்டியுள்ளதாக விளம்பரம் வெளியானது.
ஒரு படம் வெளியாகி ஓரிரு வாரங்கள் ஓடினாலே அது வெற்றிப் படமாக கருதப்படும் சூழல் தற்போது நிலவுகிறது. ஆனாலும் நாச்சியார் படத்தை வெற்றிப்படமாக கருத முடியாது. ஏனெனில் வேறு படங்கள் வெளியாகாத நிலையில் வேறு படம் இல்லாததினால் தியேட்டர்களில் ஓட்டப்பட்டு வருகிறது. இது தான் நாச்சியார் 50வது நாள் ரகசியம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜோதிகா நடித்த '36 வயதினிலே' படமும் 50 நாட்களை கடந்து ஓடியது. அதற்கு பிறகு அவர் நடித்த 'மகளிர் மட்டும்' படமும் 50 நாட்களைத் தொட்டது. இப்போது 'நாச்சியார்' படமும் 50 நாட்களைக் கடந்துள்ளது.