ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தர்மதுரை படத்திற்கு பிறகு சீனு ராமசாமி இயக்கும் படம் கண்ணே கலைமானே. நீர்பறவை படத்திற்கு பிறகு சீனு ராமசாமியும், உதயநிதியும் இணைந்துள்ளார். உதயநிதி ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இவர்கள் தவிர வசுந்தரா, வடிவுக்கரசி உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் இசை அமைக்கிறார், ரெட்ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி தயாரிக்கிறார்.
மதுரையில் நடந்து வந்த இதன் படப்பிடிப்புகள் 15ந் தேதியுடன் முடிவடைந்தது. படப்பிடிப்பு ரத்து அறிவிக்கப்பட இருந்ததால் அவசர அவசரமாக இதன் படப்பிடிப்புகள் முடிந்தது. வேலை நிறுத்தம் வாபஸ் ஆன பிறகு டப்பிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடக்கும் என்று தெரிகிறது. மதுரையை பின்புலமாக கொண்டு அழுத்தமான காதல் கதையாக கண்ணே கலைமானே உருவாகி வருகிறது.