இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கார்த்திக், கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. சூர்யாவின் உறவினரான கே.ஈ.ஞானவேல் ராஜாவின் 'ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்தனர்.
அந்தளவுக்கு தானா சேர்ந்த கூட்டம் படம் வெற்றிப் படமாக அமையவவில்லை. என்றாலும் 50-வது நாளைக் கடந்து தானா சேர்ந்த கூட்டம் ஓடிக்கொண்டிருப்பதாக சமீபத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. தற்போதைய சூழ்நிலையில் ஓரிரு நாட்கள் ஓடினாலே அதை வெற்றிப்படம் என்று கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் வெளியாகி 50-ஆவது நாளை எட்டியுள்ளது. சென்னை உள்ளிட்ட சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும், இன்னும் சில தியேட்டர்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.