வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'சாமி-2' படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. 'சாமி-2'வில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பாபி சிம்ஹா வில்லனாக நடிக்கிறார்.
இவர்களுடன் சூரி, பிரபு, ஓ.ஏ.கே.சுந்தர், ஜான் விஜய் ஆகியோரும் நடிக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 'புலி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் 'இருமுகன்' படத்தை தயாரித்தவருமான ஷிபு தமீன், தனது 'தமீன் பிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் 'சாமி-2'வை தயாரித்து வருகிறார்.
டில்லி, திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. நாளை முதல் தூத்துக்குடியில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. தூத்துக்குடியில் நடக்கும் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இப்படத்தின் படப்பிடிப்பை ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்சால்மரில் நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ஹரி.
இதற்காக 'சாமி-2' படக்குழுவினர் மார்ச்-5-ஆம் தேதி ஜெய்சால்மர் பயணமாகின்றனர். ஜெய்சல்மாரில் சாமி2 படத்தின் முக்கியமான சில காட்சிகளையும், அதிரடி சண்டை காட்சிகளையும் படமாக்க திட்டமிட்டுள்ள ஹரி, ஜெய்சால்மரில் 'சாமி-2'வின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட 20 நாட்கள் நடத்தவிருக்கிறார்.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'தீரன் அதிகாரம்' ஒன்று படத்தின் படப்பிடிப்பு ஜெய்சால்மரில் 50 நாட்களுக்கும் மேல் நடைபெற்றது. இப்போது 'சாமி-2' வின் படப்பிடிப்பும் ஜெய்சால்மரில் தொடர்ந்து பல நாட்கள் நடக்கவிருக்கிறது.
இதுவரை சாமி-2 படத்தின் படப்பிடிப்பு 50 நாட்களுக்கு மேல் நடைபெற்றுள்ளது. இன்னும் 50 நாட்கள் 'சாமி-2'வின் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.