'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா, அடல்ட் கண்டன்ட் என்கிற ஆபாச பட வகையைச் சேர்ந்த 'ஹரஹர மகாதேவகி' என்ற படத்தை தயாரித்தார். அப்படம் கமர்ஷியலாக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயகுமாரை வைத்து 'இருட்டு அறையில் முரட்டு குத்து' மற்றும் கஜினிகாந்த் ஆகிய இரண்டு படங்களை தயாரித்து வருகிறார்.
இந்த இரண்டு படங்களில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் 'கஜினிகாந்த்' படத்தின் படப்பிடிப்பு வேலைகளும் சமீபத்தில் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் வேலைகள் பூஜையுடன் இன்று சென்னையில் துவங்கியது.
'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் ஆர்யா, சாயிஷா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கி வரும் மற்றொரு படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் கௌதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு இசை அமைக்கும் பாலமுரளி பாலுவே 'கஜினிகாந்த்'படத்துக்கும் இசை அமைக்கிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் ஆகிய இரண்டு படங்களையும் இரண்டுவார இடைவெளியில் வெளியிட திட்டமிட்டுள்ளார் ஞானவேல்ராஜா.