பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடித்த 'ஸ்கெட்ச்' படம் கடந்த பொங்கலுக்கு வெளியானது. இந்தப் படத்தை 'கலைப்புலி' எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் உலகம் முழுக்க வெளியிட்டது.
இந்த படம் தமிழில் வெளியான அதே தினத்தில் தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டிருந்தனர். அப்போது முன்னணி தெலுங்கு ஹீரோக்கள் நடித்த நேரடி தெலுங்குப்படங்கள் வெளியானதால் ஸ்கெட்ச் படத்தை ஆந்திராவில் வெளியிடவில்லை. ஜனவரி 26 ஆம் தேதி வெளியிடும் முயற்சியும் கைகூடவில்லை.
இந்நிலையில் பிப்ரவரி 23 அன்று ஸ்கெட் தெலுங்குப்படத்தை வெளியிடுகின்றனர். தமிழில் வணிகரீதியில் ஸ்கெட்ஸ் வெற்றிப் படமாக அமைந்தாலும் அப்படம் பற்றி மாறுபட்ட கருத்துக்களும் இருந்தன. அதை கணக்கில் எடுத்துக்கொண்டு சுமார் 15 காட்சிகளை வெட்டிவிட்டு ஸ்கெட்ச் தெலுங்குப்பதிப்பை இன்னும் சுவாரஸ்யப்படுத்தி வெளியிடுகின்றனர்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் முன்னணி தெலுங்கு படத்தயாரிப்பாளரான சுரேஷ்பாபு ஸ்கெட்ச் தெலுங்குப்பதிப்பை வெளியிடுகிறார்.