டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், நாடோடி மன்னன் உள்ளிட்ட 16 படங்களை தயாரித்த, ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம், 17 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிக்கும் படம் "களவாணி மாப்பிள்ளை". இந்நிறுவனத்தின் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் இருந்த மணிவாசகத்தின் மகன், காந்தி மணிவாசகம் இப்படத்தை இயக்குகிறார்.
அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக அதிதி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
காமெடி கலந்த காதல் கதையாக உருவாக உள்ள இந்த படத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது.