'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் நெருங்கி வர ஆரம்பித்துவிட்டது. அதனால், இந்த வாரமும், அடுத்த வாரமும் வெளியாகும் படங்களுடன் ரிலீஸ் சீசன் குறைய வாய்ப்புள்ளது. மார்ச் மாதம் டிஜிட்டல் கம்பெனிகளுடன் ஏற்பட்டுள்ள தகராறு காரணமாக தென்னிந்தியத் திரையுலகத்தினர் புதுப் படங்களை வெளியிடாமல் ஸ்டிரைக்கில் ஈடுபடப் போகிறார்கள். அதனால், அந்த நெருக்கடியுடன் பலரும் படங்களை வெளியிட முன் வர மாட்டார்கள். மார்ச் கடைசியில் தான் புதிய படங்கள் வெளிவர வாய்ப்புகள் அதிகம்.
இந்த வாரம் 'சவரக்கத்தி, கலகலப்பு 2, சொல்லிவிடவா, நரிவேட்டை' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் 'சவரக்கத்தி' படத்திற்கும் 'கலகலப்பு 2' படத்திற்கும் தான் நேரடி போட்டி. 'சொல்லிவிடவா' படம் நேரடி தமிழ்ப் படமா அல்லது கன்னட டப்பிங் படமான என்பதை படத்தைப் பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும்.
'சவரக்கத்தி' படத்தில் மிஷ்கின், ராம், பூர்ணா ஆகியோர் நடித்துள்ளார்கள். படத்தின் பெயரில் தான் கத்தி உள்ளது, ஆனால், இது முழுவதுமாக கலகலப்பான காமெடி படம் என்கிறார்கள். சுந்தர் சி மிகக் குறுகிய காலத்தில் எடுத்து முடித்து வெளியிடும் படம் 'கலகலப்பு 2'. புதிய நட்சத்திரக் கூட்டணியுடன் அமைந்துள்ள இந்தப் படம் முதல் பாகம் அளவிற்கு வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
'சவரக்கத்தி, கலகலப்பு 2' இரண்டுமே காமெடிக்கு முக்கியத்தும் கொடுத்துள்ளதால் ரசிகர்களைக் கவர வாய்ப்புள்ளது. இரண்டில் எதற்கு ரசிகர்கள் கூட்டம் கூடப் போகிறது என்பது இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.