பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒரு படம் வெளிவந்த மறுநாளே அந்தப் படத்தை சூப்பர் வெற்றி, சாதனை வெற்றி, பிளாக் பஸ்டர் வெற்றி என விளம்பரப்படுத்துவார்கள். படம் வெளியான முதல் நாளில் அந்தப் படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பை வைத்து அது எப்படிப்பட்ட வெற்றியை அடையப் போகிறது என அப்படத்தின் தயாரிப்பாளராலும் கணிக்க முடியாது. இருந்தாலும் தமிழ் சினிமாவில் ஓடாத படத்தையும், வசூலாகாத படத்தையும் கூட சூப்பர், சாதனை வசூல் என விளம்பரப்படுத்துவது தான் வழக்கம்.
அறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29ம் தேதி வெளியான பலூன் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் ஓரிரு தியேட்டர்களில் அந்தப் படம் 25வது நாளைக் கடந்துள்ளது. அதை முன்னிட்டு இன்று படத்தின் 25வது நாளுக்கு சுமாரான வெற்றி என விளம்பரப்படுத்தி ஆச்சரியப்படுத்தி உள்ளார்கள். தமிழ் சினிமாவில் இதுவரை தங்களது படத்தை சுமாரான வெற்றி என யாருமே வெளிப்படையாகச் சொன்னதில்லை. அந்த விதத்தில் பலூன் குழுவினரின் நேர்மை பாராட்டுக்குரியதுதான்.