ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாய்கள் ஜாக்கிரதை, 'மிருதன்' படங்களைத் தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் படம் 'டிக் டிக் டிக்'. மிருதன் படத்தை அடுத்து 'ஜெயம்' ரவியுடன் சக்தி சௌந்தர்ராஜன் இணைந்துள்ள இந்தப் படம் இந்தியாவின் முதன் விண்வெளி திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது என்று சொல்லப்படுகிறது.
டி.இமான் இசை அமைக்கும் இந்த படத்தில் 'ஜெயம்' ரவிக்கு ஜோடியாக , நிவேதா பெதுராஜ் நடித்துள்ளார். நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ள 'டிக் டிக் டிக்' படத்தை அண்மையில் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்துக்கு எந்த 'கட்'டும் கொடுக்கவில்லை.
அதுமட்டுமல்ல, அனைத்து தரப்பினரும் பார்க்கக் கூடிய படம் என்று 'டிக் டிக் டிக்' படத்திற்கு 'யு' சான்றிதழும் வழங்கியது. குடியரசு தினத்தை முன்னிட்டு 'டிக் டிக் டிக்' படம் வருகிற 26-ஆம் தேதி வெளியாகிறது.
கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவினால் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார் ஜெயம்ரவி. அதனால் டிக் டிக் டிக் படத்தின் புரமோஷன்களில் கூட அவரால் முழுமையாய் ஈடுபட முடியவில்லை. இருந்தாலும் இன்று அவர் மீடியாக்களை சந்திக்க உள்ளார். ஜனவரி 26-ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.