ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரியதர்சன் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் 'நிமிர்'. மலையாள 'மகேஷின்டே பிரதிகாரம்' படத்தின் ரீ-மேக்காக உருவாகியுள்ள இப்படத்தில், நமிதா பிரமோத், பார்வதி நாயர், இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
விரைவில் வெளியாக உள்ள இப்படத்திற்கு சில தினங்களுக்கு சென்சார் நடைபெற்றுள்ளது. 'நிமிர்' படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு 'U' சான்றிதழ் வழங்கினார்கள். தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோகநாந்த் இசை அமைக்கும் இந்த படத்தில் இடம் பெறும் 'நெஞ்சில் மாமழை...' என்று துவங்கும் பாடலை சமீபத்தில் எ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்.
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்ட நிலையில், தானே நிமிர் படத்தை வாங்கிவிட்டார் உதயநிதி. தமிழகம் முழுக்க உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.