லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்த 'தலைவன் தலைவி' படம், முதல் 3 நாட்களில் 20 கோடி வரை வசூலித்து நல்ல ஓபனிங்கை கொடுத்துள்ளது. இந்த வாரம் படம் நன்றாக ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியால் தமிழ்திரையுலகம் மட்டுமல்ல, வெற்றிக்காக காத்திருந்த சத்யஜோதி நிறுவனம், விஜய்சேதுபதியும் ஹேப்பி.
படத்தில் இடம்பெற்ற குடும்ப பிரச்னை, மாமியார், மருமகள், நாத்தனார் பிரச்னை பெண்களை கவர்ந்துள்ளதால் பேமிலி ஆடியன்ஸ் அதிகம் வருகிறார்களாம். படத்தின் வெற்றிக்கு விஜய்சேதுபதி தவிர, நித்யா மேனன், அவர் மாமியராக நடித்த தீபாசங்கர், அம்மாவாக வந்த ஜானகி, நாத்தனாராக வந்த ரோஷினி ஆகியோரும் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் 100 கோடி வசூலை தாண்டியது. அதை இந்த படம் முறியடிக்குமா என்பது இன்னும் சில வாரங்களில் தெரியவரும் என்கிறார்கள். உலகம் முழுக்க ஆயிரத்துக்கும் அதிகமான ஸ்கிரீனில் தலைவன் தலைவி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த வாரம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆக உள்ளது. ஆகவே, அதிர்ஷ்டம் இருந்தால் தலைவன் தலைவி அந்த வசூலை எட்டும் கூறப்படுகிறது. இதற்கிடையே, விஜய்சேதுபதி, கார்த்தி, சிவகார்த்திகேயன், சிம்புவுக்கு நல்ல படம் கொடுத்த, நம்ம ஹீரோவுக்கு மட்டும் எதற்கும் துணிந்தவன் படத்தை கொடுத்து ஏமாற்றிவிட்டார் என்று சூர்யா ரசிகர்கள் புலம்புவதாக சோஷியல் மீடியாவில் மீம்ஸ் வருகிறது.