பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி |

துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' என்கிற முழு நீள ஆக்ஷன் படத்தில் சூரி நடித்து வருகிறார். வெற்றி மாறன் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு கும்பகோணம், தேனி போன்ற பகுதிகளில் பெரும்பாலும் படமாக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கருடன் படம் இம்மாதமான மே-யில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர். நமக்கு கிடைத்த தகவலின் படி, வருகின்ற மே 31ம் தேதி அன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.