சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா | 2024ல் அதிகம் பேர் பார்த்த படமாக 'அமரன்' | வாரணாசி கோவிலுக்கு சென்று வழிபட்ட ஸ்ரீலீலா | சங்கராந்தியில் ஒரு 'ஷங்கரா'ந்தி : கேம் சேஞ்சர் டப்பிங்கில் வியந்த எஸ்.ஜே.சூர்யா | 6 வருடங்களில் 6வது முறையாக பஹத் பாசிலுடன் இணைந்த இயக்குனர் | நான் தற்கொலை செய்தால் அரசு தான் பொறுப்பு : நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் அளித்த நடிகை விரக்தி | தம்பிக்கு கை கொடுத்தவர்கள் அண்ணனை கவிழ்த்தது ஏன் ? வைராலகும் மீம்ஸ் | ஒரே படத்தில் அறிமுகமாகும் சின்னத்திரை நடிகைகள் | மலையாள நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை திடீர் பல்டி |
நடிகர் ரகுமான் திரையுலகில் நுழைந்து இன்னும் சில தினங்களில் 40 வருடங்களை தொடப் போகிறார். என்றும் மார்க்கண்டேயன் என்று இவரையும் சொல்லலாம் என்கிற விதமாக முப்பது வருடங்களுக்கு முன்பு புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பார்த்தது போலவே இன்னும் இளமை துடிப்புடன் பல படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் ரகுமான்.
அந்த வகையில் தற்போது முதன் முதலாக பாலிவுட்டில் நுழைந்துள்ளதுடன் அமிதாப்பச்சனின் மகனாகவும் கண்பத் என்கிற படத்தில் நடித்துள்ளார் ரகுமான். இந்த படம் வரும் அக்டோபர் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அவர் மார்சியல் ஆர்ட்ஸ் கோச் ஆக நடிக்கிறார்.
தமிழில் அவர் ‛நிறங்கள் மூன்று, அஞ்சாமை' ஆகிய படங்களில் நடித்து முடித்து விட்டார். இதில், நீட் தேர்வுக்கு எதிரான கருத்துக்களுடன் உருவாகியுள்ள அஞ்சாமை படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாகவும், வழக்கறிஞராகவும் என இரண்டு வித கதாபாத்திரங்களில் அதே சமயம் டபுள் ஆக்சன் ரோலாக இல்லாமல் ஒரே ஆளாக நடித்துள்ளார். நீட் தேர்வு விஷயத்தில் நீதியை நிலை நாட்டுவதற்கு தனது காக்கி யூனிபார்ம் தடையாக இருக்கிறது என்பதால் அந்த வேலையை ராஜினமா செய்துவிட்டு கருப்பு கவுன் மாட்டிக்கொண்டு வழக்கறிஞராக சட்டத்துடன் போராடும் இரு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நடிகர் ரகுமான்.