Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இதுதான் மெகா கூட்டணி : 32 ஆண்டுளுக்கு பின் இணைந்து நடிக்கும் ரஜினி, அமிதாப்?

09 ஜூன், 2023 - 19:05 IST
எழுத்தின் அளவு:
Rajini---Amitabh-to-act-after-32-year

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுதப்படியாக தற்போது தனது மகள் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இதில் சிறப்பு வேடத்தில் அவர் நடிக்கிறார். இதை தொடர்ந்து இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி தனது 170வது படத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்த நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1991ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த ஹம் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு கழித்து ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனராம். மேலும் இது நடக்கும் பட்சத்தில் இதுதான் அமிதாப்பச்சன்க்கு முதல் நேரடி தமிழ்ப்படமாகவும் அமையும். அதுமட்டுமல்ல இது தான் உண்மையான மெகா கூட்டணி படமாகவும் அமையும். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

முன்னதாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உயர்ந்த மனிதன் படத்தில் நடித்து வந்தார் அமிதாப். ஆனால் அந்தப்படம் பாதியில் நின்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் தேவரகொண்டா மீது குற்றச்சாட்டிய பிரபல நடிகைவிஜய் தேவரகொண்டா மீது ... எனது காதலைக் கண்டுபிடித்தேன் - வருண் தேஜ் எனது காதலைக் கண்டுபிடித்தேன் - வருண் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Columbus -  ( Posted via: Dinamalar Android App )
10 ஜூன், 2023 - 23:36 Report Abuse
Columbus Rajinis Pasha is a part remake of Mukul Anand directed Hum starring Amithab, Rajini and Govinda. The tamil film was far better than the original.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10 ஜூன், 2023 - 12:44 Report Abuse
Mani . V கதாநாயகன் வேஷம் கட்டி நடிக்க வேண்டிய நிலையில் தமிழ் திரையுலகம் இருப்பது ரொம்பவும் வேதனையானது.
Rate this:
சசிக்குமார் திருப்பூர் இந்த படத்தில் இருந்து ஹம் தான் பல காட்சிகள் பாட்ஷா படமாக வந்தது.
Rate this:
சசிக்குமார் திருப்பூர் இந்த படத்தில் இருந்து ஹம் தான் பல காட்சிகள் பாட்ஷா படமாக வந்தது
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
10 ஜூன், 2023 - 10:25 Report Abuse
M.Sam கூட்டணி என்னமோ ஓகே தான் ஆனல் மக்கள் பார்ப்பார்களா ரஜினி ரசிகர்கள் வேண்டுமானால் பார்ப்பார்கள்
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in