Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'லியோ' வியாபாரத்தை பரப்புவது விஜய்யா, தயாரிப்பாளரா ?

05 ஜூன், 2023 - 10:21 IST
எழுத்தின் அளவு:
Who-is-spreading-Leo-Business?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படம் இன்னும் நான்கு மாதங்களுக்குப் பிறகு அக்டோபர் 19ம் தேதிதான் வெளியாக உள்ளது. ஆனால், அதற்குள்ளாகவே படத்தின் வியாபாரம் பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள். அதற்குப் பின்னணியில் இருப்பது விஜய்யா, அல்லது படத்தின் தயாரிப்பாளரா என்பது தெரியவில்லை.

தமிழ் சினிமாவில் இதுவரை நடக்காத அளவிற்கு ஒரு பெரும் வியாபாரம் அப்படத்திற்கு நடந்துள்ளதாக பரப்பி வருகிறார்கள். இதுவரையில் இல்லாத அளவிற்கு டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை, வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஏற்கெனவே, இப்படத்திற்கான கேரள வினியோக உரிமையும் அதிக விலைக்கு விற்கப்பட்டதாகச் சொன்னார்கள். இவ்வளவு உரிமைகள் ஒரு பக்கம் இருந்தாலும் தமிழக வெளியீட்டு உரிமை அல்லது ஏரியா வாரியாக விற்கப்படும் உரிமை ஆகியவைதான் முக்கியமானவை. இவற்றை அதிக விலைக்கு விற்கவே மற்ற உரிமைகளைப் பற்றிய தகவல்களைப் பரப்புகிறார்கள் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

ஏற்கெனவே, விஜய் அவருடைய அடுத்த படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றும் சிலர் இரண்டு வாரங்களுக்கு முன்பு தகவலைப் பரப்பினார்கள். இப்போது 'லியோ' உரிமை பற்றிய தகவல் பரப்பப்டுகிறது. இந்த வருடத்தின் அதிக வியாபாரமாக 'லியோ' படம்தான் இருக்கும். அதற்குப் பிறகே ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படம் இருக்கும் என ரஜினி ரசிகர்களையும் வம்புக்கிழுக்கிறது அந்த 'லியோ' குரூப்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஜெய்ப்பூரில் நடந்த 'எங்கேயும் எப்போதும்' சர்வானந்த் திருமணம்ஜெய்ப்பூரில் நடந்த 'எங்கேயும் ... எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

05 ஜூன், 2023 - 11:32 Report Abuse
G KARTHIKEYAN என்ன பண்ண முடியும்
Rate this:
KC Arun - Tirunelveli,இந்தியா
05 ஜூன், 2023 - 11:22 Report Abuse
KC Arun உண்மை. தளபதி என பேர் கொண்டாலே, வாயிலே வடை சுடுவது பழக்க வழக்கம். இவ்வளவு பணம் ஒரு திரைப்படத்தில் சாத்தியமா? என சிறிது சிந்தித்தாலே வாய்ப்பில்லை என்ற பதில் அனைவருக்கும் கிடைக்கும்.
Rate this:
05 ஜூன், 2023 - 10:30 Report Abuse
KARTHICK LR ஒன்றிலிருந்து மூன்று, நான்காய் அதிகரித்து விட்டதாக கேள்வி. கோல்டு காயின்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in