Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛‛இசையாய் என்றும் மலரும்'' பாட்டுத்தலைவன் எஸ்பிபி.,யின் பிறந்தநாள் ஸ்பெஷல்

04 ஜூன், 2023 - 12:45 IST
எழுத்தின் அளவு:
S.-P.-Balasubrahmanyam-Birth-Anniversary:-Looking-Back-At-Legendary-Singer's-Magical-Creations

பாட்டுத்தலைவனாக சிகரம் தொட்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். காலையில் சுப்ரபாதமாக, மாலையில் துள்ளல் டிஸ்கோ கீதங்களாக, இரவில் நிம்மதியாக உறங்க தாலாட்டு பாடலாக வீட்டுக்கு வீடு கேட்டுக் கொண்டே இருக்கும் பாலுவின் பாட்டு. கற்கண்டு குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் உயிரில் கலந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று ஏறத்தாழ 16 இந்திய மொழிகளில் 40000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பெருமை மிக்கவர் எஸ்.பி.பி.

கொரோனா தொற்றுக்கு ஆளாகி, கடந்த 2020ல் ஆக., 5 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எஸ்.பி.பி. உடல்நிலை தேறி வந்த நிலையில் செப்., 25ல் மறைந்தார். எஸ்.பி.பி.யின் 77வது பிறந்தநாள் இன்று(ஜூன் 4) கொண்டாடப்படுகிறது. அவரின் பிறந்தநாளில் அவரைப்பற்றி சற்றே திரும்பி பார்ப்போம்...

எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 1946ல் ஜுன் 4ல் -எஸ்.பி.சாம்பமூர்த்தி என்பவருக்கு மகனாக தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். காளகஸ்தியில் எஸ்எஸ்எல்சியும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் பியுசியும் முடித்து, ஜேஎன்டியு காலேஜ் ஆப் என்ஜினியரிங்கில் பி.இ படிப்பதற்காக சேர்ந்தார். உடல் நிலை பாதிப்பால் படிப்பை தொடர முடியாமல் போக சென்னைக்கு வந்து ஏஎம்ஐஇ பிரிவில் சேர்ந்து படித்தார்.
இசை பயணம்
1968ல் நடந்த அனைத்து கல்லூரி போட்டியில் இவர் பாடிய பாடலைக் கேட்ட மறைந்த ஓவியர் பரணி, இவரை இயக்குநர் ஸ்ரீதரிடம் அறிமுகம் செய்து வைக்க, அவர் மூலம் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதனை சந்தித்து, அவரிடம் சில பாடல்களை பாடி காட்டியிருக்கிறார் எஸ்.பி.பி. தமிழ் தெரியுமா என்று எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்பிபி.,யைப் பார்த்து கேட்க தனக்கு பேசத் தெரியும் படிக்க தெரியாது என்று கூறியிருக்கின்றார்.

"ராமு" திரைப்படத்தின் நிலவே என்னிடம் பாடலைக் கூட அவர் தெலுங்கில் எழுதி வைத்துத் தான் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் பாடி காண்பித்திருக்கிறார். உனக்கு நான் பாட வாய்ப்பு தருகிறேன், தமிழை நன்றாக கற்றுக் கொள் என்ற எம்எஸ்வியின் அறிவுரைப்படி, தமிழை நன்றாக கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். எம் எஸ் விஸ்வநாதன் தான் கூறிய படியே இவருக்கு "ஹோட்டல் ரம்பா" என்ற படத்தில் பின்னணிப் பாடகி எல்ஆர்ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடும் வாய்ப்பை வழங்கினார். ஆனால் அந்தப் படம் ஏனோ வெளியாகவில்லை.

முதல் வாய்ப்பு
அதன் பின் எம்எஸ்விஸ்வநாதன் இசையமைப்பில் வெளிவந்த "சாந்தி நிலையம்" திரைப்படத்தில் பி.சுசிலாவுடன் இணைந்து இயற்கை என்னும் இளைய கன்னி... என்ற பாடலை பாடி தமிழ் திரையுலகின் பின்னணி பாடகர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். இவர், பாடிய முதல் தமிழ் பாடல் "சாந்தி நிலையம்" படத்தில் என்றாலும் முதலில் வெளிவந்தது அடிமைப் பெண் படத்தில் இடம் பெற்ற ‛ஆயிரம் நிலவே வா படப் பாடல் தான். எப்படி எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் ஒரு டிஎம்.சௌந்தர்ராஜனோ. அதுபோல் அடுத்த தலைமுறை கதாநாயக நடிகர்களான ரஜினி, கமல்ஹாசனுக்கு இவருடைய குரலே மிகப் பொருத்தமானதாக மாறியது.

1976ம் ஆண்டு இசையமைப்பாளர் இளையராஜாவின் வருகைக்குப் பின் இவருடைய திரையிசைப் பயணம் ரெக்கை கட்டி பறந்தது என்றே சொல்ல வேண்டும். இளையராஜா என்ற இசை ஜாம்பவானின் கைவண்ணத்தில் ஆயிரக்கணக்கான வெற்றிப் பாடல்களை பாடி ஒரு கால் நூற்றாண்டு காலம் தமிழ் திரையிசை ரசிகர்களை தன் குரலால் வசீகரித்திருந்தார்.

இளையராஜாவின் இசையில் இவர் பாடிய முதல் பாடல் "பாலூட்டி வளர்த்த கிளி" என்ற படத்தில் எஸ்.ஜானகியோடு இணைந்து பாடிய நான் பேச வந்தேன் என்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆரில் தொடங்கி இன்றைய இளம் கதாநாயக நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என்று அனைவருக்கும் பாடி இருக்கிறார் என்றால் இவரது குரலுக்கு முதுமை என்பதே இல்லை என்றே அர்த்தம்.

பன்முக கலைஞர்
பன்முகத் தன்மை வாய்ந்த இந்தப் பாடகர் பாடல்கள் மட்டுமின்றி நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என அனைத்திலும் முத்திரை பதித்த ஒரு சாதனையாளர். "சிகரம், கேளடி கண்மணி, குணா, தலைவாசல், திருடா திருடா, காதலன், ரட்சகன், பிரியமானவளே" போன்ற திரைப்படங்கள் இவருடைய நடிப்பிற்கு சான்றாகவும், ரஜினிகாந்த் நடித்து இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த "துடிக்கும் கரங்கள்" மற்றும் இவரே கதாநாயகனாக நடித்து வெளிவந்த "சிகரம்" என்ற இந்த இரு திரைப்படங்களையும் இவருடைய இசையமைப்பிற்கு சான்றாகவும் கூறலாம்.

பத்மஸ்ரீ, பத்மபூஷண், 6 முறை தேசிய விருதுகள், பல்வேறு மாநில விருதுகள், பிலிம்பேர், தனியார் அமைப்பு விருதுகள் என அவரின் இசை மகுடத்தை அலங்கரித்தன. ‛‛இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... என எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார். இந்த பாடல் வரி அவருக்கு மிகவும் பொருத்தமானதே. இவரது சாகாவரம் பெற்ற பாடல்கள், காற்றில் கலந்து உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும். இவர் மறைந்தாலும் இவரின் குரல் என்றென்றும் ஒலித்து கொண்டே இருக்கும்.

எஸ்.பி.பி. மறைந்துவிட்டாலும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் மறக்காமல் கொண்டாடி வருகின்றனர். சமூகவலைளதங்களில் எஸ்.பி.பி.யின் நினைவலைகளையும், அவரின் சிறந்த பாடல்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

வாசகர்களாகிய நீங்களும் எஸ்.பி.பி. பற்றிய நினைவலைகளையும், அவரது பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல்களையும் கருத்தாக நமது இணையதளத்தில் பதிவிடலாம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு விரைவில் திருமணம்!ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு ... 7 வருட வசூல் சாதனையை முறியடித்த 2018 படம்! 7 வருட வசூல் சாதனையை முறியடித்த 2018 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

05 ஜூன், 2023 - 14:00 Report Abuse
ருத்ரா இவருக்கு நிகர் இவரே
Rate this:
05 ஜூன், 2023 - 07:11 Report Abuse
V.Saminatha பேராசையற்ற மனிதனை காண்பதரிதெனும் மொழியை உண்மையாக்கியதில் இவரும் ஒருவர்- ஆனால் எளிய மனிதர் தலைக்கனமில்லாதவரென ஏசுதாஸையும் மிஞ்சுகிறார்-புகழ் பெறத் துடிப்பவனை சிலசமயம் கடவுள் தடுக்கிறாரென்ற உண்மை இவர் விஷயத்தில் நிகழ்வானது.
Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
04 ஜூன், 2023 - 16:58 Report Abuse
g.s,rajan Padu Nilave Balu is Still Alive in all of our Hearts....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in