Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோயின் ஆனார் யு டியூப்பர் புவனேஸ்வரி

09 மார், 2023 - 13:21 IST
எழுத்தின் அளவு:
You-Tuber-fame-Bhuvaneshwari-turn-as-Heroine-in-a-movie

சமூக வலைத்தளத்தின் மூலம் பிரபலமாகும் பெண்கள் திரைப்படத்துக்கு வருவது அதிகரித்துள்ளது. தற்போது முன்னணியில் உள்ள மிருனாளினி உள்பட பலர் வந்துள்ளனர். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் புவனேஸ்வரி. 'டியூப்லைட்' என்ற சேனல் மூலம் புகழ்பெற்ற புவனேஸ்வரி ஏற்கெனவே அஜித் நடித்த 'துணிவு' படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது 'கிறிஸ்டினா கதிர்வேலன்' என்ற படத்தின் மூலம் நாயகி ஆகியிருக்கிறார்.

இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி திரைக்கலைக்கூடம் சார்பில் ஆர்.பிரபாகரன் தயாரிக்கிறார். எஸ். ஜே. அலெக்ஸ் பாண்டியன் இயக்குகிறார். 'காலங்களில் அவள் வசந்தம்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிய கவுஷிக் ராமும், யுடியூபர் ரவி விஜேவும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம்புலி , குக்வித் கோமாளி புகழ், சில்மிஷம் சிவா, அஜித் யுனிக், டி எஸ் ஆர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். பிரஹத் முனியசாமியின் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் குறித்து இயக்குநர் எஸ்ஜே அலெக்ஸ் பாண்டியன் கூறுகையில், "இது ஒரு ரொமான்டிக் காமெடியான, எதிர்பாராத பல திருப்பங்கள் நிறைந்த, உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம். கிராமத்திலிருந்து கல்லூரி படிப்பிற்காக நகரத்திற்கு வரும் கதாநாயகன் சந்திக்கும் பிரச்னைகளே படத்தின் முக்கிய கருவாக உள்ளது. அழுத்தமான சமூக கருத்துக்களை நகைச்சுவையுடன் கூறக்கூடிய படமாக இது இருக்கும். என்றார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஆன்லைன் மோசடியில் சிக்கி பணத்தை இழந்த நக்மாஆன்லைன் மோசடியில் சிக்கி பணத்தை ... ஆபரேஷன் அரபைமா : போர் கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் ஆபரேஷன் அரபைமா : போர் கப்பலில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15 மார், 2023 - 04:49 Report Abuse
J.V. Iyer யாரும்மா இது? நல்லா இருந்தா சரி. எல்லோருக்கும் காலம் வரும், சம்பாதிக்க நேரம் வரும். வருவது சினிமாவே..
Rate this:
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
10 மார், 2023 - 14:29 Report Abuse
Natchimuthu Chithiraisamy எல்லாம் நல்லது என்பது போல் இந்துவை கேவலப்படுத்த லட்சுமி பிரபாகரன் அனுமதிக்கக்கூடாது.
Rate this:
shakti - vilupuram,கோட்டி டி'ஐவைரி
09 மார், 2023 - 16:18 Report Abuse
shakti கிறிஸ்டினா எப்படிடா கிறிஸ்டினா கதிர்வேலன் ஆனார் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in