Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கில் தடுமாறும் 'வாரிசு', தோல்வியில் 'துணிவு'

23 ஜன, 2023 - 12:57 IST
எழுத்தின் அளவு:
How-much-Varisu,-Thunivu-collected-in-Telugu

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'வாரிசு' படம் வெளியீட்டிற்கு முன்பு தெலுங்குத் திரையுலகத்தில் கடும் சர்ச்சையைக் கிளப்பியது. நேரடி தெலுங்குப் படங்களான சிரஞ்சீவி நடித்த 'வால்டர் வீரய்யா', பாலகிருஷ்ணா நடித்த 'வீரசிம்ஹா ரெட்டி' ஆகிய படங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என குரல்கள் எழுந்தன. 'வாரிசு' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'வாரசுடு' படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என அங்கு பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள்.

'வாரிசு' படத்தைத் தயாரித்த தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு சில வருடங்களுக்கு முன்பு 'பேட்ட, விஸ்வாசம்' படங்கள் அங்கு டப்பிங் ஆகி வெளியான போது அந்தப் படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேரடிப் படங்களுக்குத்தான் ஆதரவு தர வேண்டும் என்று பேசினார். அவர் பேசியதையே அவருக்கே திருப்பிக் கொடுத்தனர் சில தெலுங்கு சினிமா பிரமுகர்கள்.

கடைசியில் தெலுங்குப் படங்களுக்கு விட்டுக் கொடுத்து தமிழில் படம் வெளிவந்த நான்கு நாட்களுக்குப் பிறகுதான் தெலுங்கில் 'வாரசுடு' படத்தை வெளியிட்டார் தில் ராஜு. அங்கு படம் 25 கோடி வசூலைப் பெற்றாலும் லாபத்தைத் தொட தடுமாறி வருகிறது. அதற்குக் காரணம் அதிக விலைக்கு விற்கப்பட்ட தெலுங்கு உரிமை. 14 கோடிக்கு விற்கப்பட்டு இதர செலவுகளுடன் சேர்த்து அந்தப் படம் 15 கோடி ஷேர் தொகையைத் தந்தால்தான் லாபத்தைப் பெற முடியும். ஆனால், இதுவரை 14 கோடி வரைதான் பெற்றுள்ளதாம். இன்னும் ஒரு கோடி ஷேர் தொகை பெற்றால்தான் லாபத்தைத் தொட முடியும் என்கிறார்கள்.

'துணிவு' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'தெகிம்பு' 3 கோடிக்கு விற்கப்பட்டதாம். மொத்த வசூலாக 4 கோடி கிடைத்துள்ளது. இதுவரையில் ஷேர் தொகையாக 2 கோடி மட்டுமே வந்துள்ளது என்கிறார்கள். மேலும் 1 கோடி வந்தால்தான் படம் லாபத்தை ஈட்ட முடியும். அதற்கு வாய்ப்பேயில்லை என்பதே தகவல்.

இன்று முதல் தியேட்டர்களில் முன்பதிவு கூட சரியாக நடக்கவில்லை. நேற்றோடு இரண்டு படங்களுக்குமான வசூல் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது என்பதே உண்மை. 25 கோடி வரை வசூலித்தாலும் அதிக விலைக்கு விற்கப்பட்ட காரணத்தால் 'வாரிசு' லாபத்தைப் பெற முடியாமல் தவிக்கிறது. 'துணிவு' படம் குறைந்த விலைக்கு விற்கப்பட்டாலும் குறைந்த அளவே வசூலித்ததால் தோல்வியிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறது.

ஆக, தெலுங்கில் 'வாரிசு' குறைவான வித்தியாசத்தில் நஷ்டத்தையும், 'துணிவு' கூடுதலான வித்தியாசத்தில் தோல்வியையும் தழுவுகிறது என்பதே இன்றைய நிலை.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ்நாடு அரசு கள் விற்கலாம்: பேரரசு ஆலோசனைதமிழ்நாடு அரசு கள் விற்கலாம்: பேரரசு ... யு டியுபில் புதிய சாதனை படைத்த பின்னணி பாடகி அல்கா யாக்னிக் யு டியுபில் புதிய சாதனை படைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

vadivelu - thenkaasi,இந்தியா
24 ஜன, 2023 - 07:28 Report Abuse
vadivelu தமிழ் நாட்டில் சில கருத்துக்கள் சில கூட்டங்களுக்கு அது ஏதோ மத்திய அர்ஷியா குறிப்பதாக நினைத்து கையை தட்டும், அதே நிலைமை மற்ற மாநிலங்களில் இல்லை.அவர்கள் அரசி எதிர்ப்பார்கள், ஆனால் சிங்கப்பூரில் நாலணாவுக்கு வைத்தியம பார்கிரார்களா என்றால் நம்ப மாட்டார்கள், சிரிப்பார்கள்.அப்படிதான் வங்கி கணக்கு வைக்க வேண்டாம், உண்டி போதும் , வீட்டிலேயே பணத்தை வைத்து கொள்ளுங்கள் என்றால் கடுப்பாகி யிருப்பார்கள்.
Rate this:
Mohan - Salem,இந்தியா
23 ஜன, 2023 - 19:43 Report Abuse
Mohan ஹூம். எவனோ சம்பாதிக்க ஏன் இவ்வளவு டீடெயிலாக மண்டை காயற மாதிரி கணக்கு??. எந்த நடிகனும் தனக்குத்தான் நல்லது பண்ணிக் கொள்வான்.... சப்
Rate this:
BALU - HOSUR,இந்தியா
23 ஜன, 2023 - 18:56 Report Abuse
BALU ஆண்டவருக்கு நன்றி.தோத்திரம்.
Rate this:
Gopi - Chennai,இந்தியா
23 ஜன, 2023 - 17:08 Report Abuse
Gopi இங்க இருந்து ஒரு தமிழன் கூட அங்கபோயி கவுன்சிலர் கூட ஆகமுய்டுயாது. இதுக்கு மேல தெலுங்குல கர்நாடகாவை போல தமிழ்படத்தை நாசமாக்கிட்டாங்க.
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
23 ஜன, 2023 - 14:15 Report Abuse
angbu ganesh இதுக்குத்தான் ஸ்டார் VALUE வேணும் அதுக்கு ரஜினி தான் பொருத்தம்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in