Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ப்ரின்ஸ், சர்தார் : தீபாவளி படங்கள் ஒரு பார்வை

20 அக், 2022 - 18:23 IST
எழுத்தின் அளவு:
Preview-about-Diwali-movies-Prince-and-Sardar

இந்தாண்டு தீபாவளி நவ., 24ல் திங்கள் கிழமை வருகிறது. அதையொட்டி இரண்டு படங்கள் நாளை(அக்., 21) தமிழில் வெளியாகின்றன. அந்தவகையில் சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ், கார்த்தியின் சர்தார் படங்கள் வெளியாகின்றன. இந்த இரண்டு படங்களை பற்றி சற்றே பார்ப்போம்....

பிரின்ஸ்
நடிகர்கள் : சிவகார்த்திகேயன், சத்யராஜ், மரியா ரியா போஷாப்கா
இயக்கம் : அனுதீப்
இசை : எஸ் எஸ் தமன்

2021ல் தெலுங்கில் ஜதி ரத்னலு படத்தின் மூலம் பிரபலமான அனுதீப் தான் இந்த பிரின்ஸ் படத்தை இயக்கி உள்ளார். சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, நாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா நடித்து தமிழில் அறிமுகுமாகி உள்ளார். கடலூர் பையன், புதுச்சேரி பொண்ணு இவர்களுக்குள் ஏற்படும் காதல் அதனால் ஏற்படும் பிரச்னைகளை ஜாலியாக சொல்லும் படம் இது. ரொமான்டிக் காமெடி படமாக வந்தாலும் படத்தில் ஒரு செய்தியும் சொல்லி உள்ளனர்.

சர்தார்
நடிப்பு : கார்த்தி ராஷி கண்ணா , ரெஜீஷா, லைலா சங்கி பாண்டே ,முனிஷ் காந்த். ரித்விக்
இயக்கம் : பிஎஸ் மித்ரன்
இசை : ஜிவி பிரகாஷ்

கார்த்தி படங்களில் அதிக பட்ஜெட் எடுக்கப்பட்ட படம் தான் இந்த சர்தார். உளவாளிகள் பற்றிய கதை என்பதால் பிரமாண்டமாக படமாக்கி உள்ளார். தந்தை மகன் என இரண்டு வேடங்களில் கார்த்தி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா நடித்துள்ளனர். நமது ஊரில் நமது மண்ணில் ஒருவன் உளவாளியாக இருந்தால் அவன் எப்படி தோன்றுவான் எப்படி செயல்படுவான் எப்படி அணுகுவான் என்பதை பரபரப்பாக சொல்லும் படம் இது. இதை மேலோட்டமாக கூறாமல் உணர்வுபூர்வமாக கூறியிருப்பது சர்தார்.

இந்த இரண்டு படங்களுக்கும் கணிசமான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டில் எந்த படம் மக்கள் மனதை வெல்ல போகிறது என்பது நாளை தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
டிக்கெட் கட்டணத்தை உயர்த்துங்க - அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கைடிக்கெட் கட்டணத்தை உயர்த்துங்க - ... தொடர்ந்து ஆங்கில தலைப்பு ஏன்? : சிவகார்த்திகேயன் விளக்கம் தொடர்ந்து ஆங்கில தலைப்பு ஏன்? : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Venkat -  ( Posted via: Dinamalar Android App )
21 அக், 2022 - 11:11 Report Abuse
Venkat ponniyin Selvan will again win the race
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
21 அக், 2022 - 05:08 Report Abuse
NicoleThomson இரண்டிலும் ஒரே குடும்பத்தினர் கல்லா காட்டுவார்கள் அது எவ்வளவு?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in