Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆதிபுருஷ் 3டி டீசரை ரசிகர்களுக்காக 60 தியேட்டர்களில் திரையிடும் பிரபாஸ்

07 அக், 2022 - 16:00 IST
எழுத்தின் அளவு:
Prabhas-to-screen-Adipurush-3D-teaser-in-60-theatres

பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசரை அக்டோபர் இரண்டாம் தேதி அயோத்தியில் வெளியிட்டார்கள். ஆனால் இந்த டீசர் மிகப்பெரிய விமர்சனங்களுக்கு உள்ளாகி சோசியல் மீடியாவில் டிரோல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று தெலுங்கு ஊடகங்களுக்கு ஆதிபுருஷ் படத்தின் 3டி டீசரை திரையிட்டு காண்பித்துள்ளார்கள். ஐதராபாத்தில் உள்ள ஏஎம்பி திரையரங்கில் இந்த சிறப்பு காட்சி நடைபெற்றுள்ளது.

அதையடுத்து மீடியாக்களை சந்தித்த பிரபாஸ், ‛‛ஆதிபுருஷ் படத்தின் 3டி பதிப்பு அபரிமிதமான வரவேற்பு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. எனது படத்தை 3டி இல் பார்த்தது ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு குழந்தையாக மாறி பரவசமடைந்தேன். இந்த டீஸரை ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் ரசிகர்களுக்காக 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இது நிச்சயமாக திரையரங்குகளில் காணவேண்டிய ஒரு படம். இப்படத்திற்காக உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டிக்காத்திருக்கும் அதேவேளை அடுத்த 10 தினங்களுக்கு இப்படம் குறித்து பல சர்ப்ரைஸான கண்டெண்டுகளை வழங்கவிருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்திய மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகும் முதல் இந்திய திரைப்படம் இதுவாகும். அதனால் திரையரங்கில் இந்த படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சிப்படுத்தும். அதில் எந்த சந்தேகமும் இல்லை'' என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிரபாஸ் படத்தால் பின்வாங்கிய விஜய்யின் வாரிசுடுபிரபாஸ் படத்தால் பின்வாங்கிய ... வாரிசு - குஷ்பு வெளியிட்ட தகவல் வாரிசு - குஷ்பு வெளியிட்ட தகவல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

தமிழன் - கோவை,இந்தியா
09 அக், 2022 - 00:13 Report Abuse
தமிழன் ஆம்...நம் பொன்னியின் செல்வன் படத்தை வேண்டுமென்றே ராஜமெளலியின் மவுசுக்காக தரமில்லாத விமர்சனங்களை வாரி வாரி இறைத்த இந்த தெலுங்கன்களின் படத்தை இங்கு நாம் புறக்கணிக்க வேண்டும். தயவுசெய்து தெலுங்கு படத்தை வேண்டுமென்றே தரமில்லாமல் விமர்சனம் செய்ய வேண்டாம்... பிறகு அவனுகளுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்...தெலுங்கு படத்தை இங்கு புறக்கணியுங்கள் போதும்....
Rate this:
08 அக், 2022 - 07:39 Report Abuse
Radhakrishnan தெலுங்கு மாநிலங்களைத் தவிர வேறெங்கும் இந்தப் படம் ஒடப் போவதில்லை. சகல வியாபாரத் தந்திரங்களையும் முயற்சிப்பார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in